search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜிஆர் படங்கள்"

    முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் தங்களுக்கு பாடங்கள் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். #MGR #TNMinister #KadamburRaju
    சென்னை:

    விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எழுமின்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் முன்னிலையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டனர்.

    நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால்தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.

    வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் தான் எங்களுக்கு பாடங்கள்.


    அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித்தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான்.

    “எழுமின்” திரைப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தயாரிப்பாளரும், இயக்குனருமாகிய வி.பி.விஜி பேசும்போது, “எழுமின் திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    நடிகர் விவேக் பேசுகையில், “தமிழ்நாட்டில் சமீபமாக பல ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்திவென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள்’’ என்றார்.

    விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும் மாணவர்களுக்காக பிரமாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. #MGR #TNMinister #KadamburRaju
    ×